ஸ்டார் ஹோட்டலில் பில் கட்டாமல் நைசாக எஸ்கேப் ஆன பிரபல நடிகை.! அவருக்கு இப்படியொரு சோகமா?

famous actress escape from hotel without paying bill


famous actress escape from hotel without paying bill

தமிழ் சினிமாவில் கரணுடன் சேர்ந்து கொக்கி, சரத்குமாருடன் வைத்தீஸ்வரன், மற்றும் அர்ஜூனுடன் திருவண்ணாமலை ஆகிய படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. 

அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். பின்னர் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அங்கும் அவர் ஒரு கட்சியில் இல்லாமல் மாறிக் கொண்டே இருந்தார்.

pooja gandhi

இந்நிலையில் வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த பூஜா காந்தி சமீபத்தில் பெங்களூரில் உள்ள அசோக் என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார்.

மேலும் அங்கு தங்கியதற்கான பில் தொகை ரூபாய் 4.5 லட்சம் தொகையை செலுத்தாமல் நைசாக அங்கிருந்து நழுவியுள்ளார். இதனை தொடர்ந்து ஹோட்டல்  நிர்வாகம் காவல் நிலையத்தில் பூஜா காந்தி மீது புகார் அளித்தது.

pooja gandhi

இதனை தொடர்ந்து போலீசார் இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பூஜா காந்தி ஹோட்டல் நிர்வாகத்திற்கு 2 லட்சம் பணத்தை செலுத்தியது. மேலும் பணம் இல்லாத நிலையில் படவாய்ப்பு கிடைத்தவுடன் மீதி பணத்தை விரைவில் தருகிறேன் என வாக்கு கூறியுள்ளார்
 இச்சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.