சினிமா

பிரபல நடிகை திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய சினிமாத்துறை!

Summary:

famous actress died


பழம்பெரும் இந்தி நடிகை வித்யா சின்ஹா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. இவர் 80களில் வெளியான சோட்டி சி பாத், ரஜினிகந்தா போன்ற ஏராளமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

அவருக்கு நீண்ட நாட்களாக நுரையீரல் மற்றும் இதய பாதிப்பு இருந்து வந்தது. இந்தநிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வித்யா சின்ஹா மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவரது உயிர் பிரிந்தது.

இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த வித்யா சின்ஹா, 1986-ஆம் ஆண்டு ஜீவா என்ற இந்தி படத்தில் நடித்தார். சற்று ஓய்வில் இருந்த அவர் மீண்டும் கடந்த 2011-ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான 'பாடி கார்டு' திரைப்படத்தில் நடித்தார். தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார் வித்யா சின்ஹா.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று அவரது உடல்நிலை மோசமாகவே, உடனடியாக சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார். 

மறைந்த வித்யா சின்ஹாவுக்கு ஜான்வி என்ற மகள் உள்ளார். வித்யாவின் மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 


Advertisement