சினிமா

பிரபல திரைப்பட நடிகை காலமானார்!. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த திரையுலகினர்!.

Summary:

famous actress died


மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் ஏராளவற்றில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவகி அம்மா. 97-வயது நிரம்பிய இவர் இன்று காலமானார்.

 நடிகை தேவகி அம்மா கிலுக்கம், வக்காலத்து நாராயணன்குட்டி, கொட்டாரம் போன்ற திரைப்படங்களில் நடித்து அனைவரிடமும் புகழை பெற்றார். மேலும்,
ரேடியோவில் ஒலிப்பரப்பாகும் நாடகங்கள் மூலமும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் வயது முதிர்வு நோய்கள் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேவகி அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

பழம்பெரும்  நடிகை தேவகியின் இறுச்சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளது என அறிவித்துள்ளனர். தேவகியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 


Advertisement