டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகாரளித்த பிரபல நடிகை.?



Famous actress complaint about dance master behaviour

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சயந்திகா பானர்ஜி. டிவி ரியாலிட்டி ஷோ மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் சயந்திகா. சில, பல பெங்காலி படங்களில் நடித்துள்ள இவர், தனது நடிப்பு மற்றும் நடனத் திறமையால் அனைவரையும் கவர்ந்தவர்.

controversy

மேலும் இவர் 2021ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தற்போது அக்கட்சியில் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், "சாயாபஜ்" படத்தில் நடிப்பதற்காக சமீபத்தில் இவர் வங்கதேசம் சென்றிருந்தார்.

அங்கு நடந்த படப்பிடிப்பில் படத்தின் நடன இயக்குனர் மைக்கேல் தன்னிடம் அத்துமீறி நடந்ததாகக் கூறி புகாரளித்த சயந்திகா, தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்காமல் கொல்கத்தா திரும்பிவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மைக்கேல் படப்பிடிப்புத் தளத்தில் பலமுறை என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.

controversy

இதுகுறித்து நான் படக்குழுவினரிடம் பலமுறை கூறியும், தயாரிப்பு தரப்பில் இருந்து எந்தவொரு ஆதரவும் எனக்கு கிடைக்கவில்லை. எனவேதான், படப்பிடிப்பில் பங்கேற்காமல் கொல்கத்தா திரும்பிவிட்டேன்" என்று சயந்திகா கூறியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.