சினிமா

பேட்ட படத்தில் நடித்த பிரபல நடிகரின் வீட்டில் நேர்ந்த சோகம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

Summary:

famous actor's sister died

பிரபல பாலிவுட் நடிகரும்,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவருமான நவாசுதீன் சித்திக்கின் தங்கை புற்று நோய் காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 26.

உத்தரப்பிரதேசம் புதானா என்ற கிராமத்தில் சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் நவாசுதீன் சித்திக். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட்டில் தீவிரமாக நடித்து வருகிறார். தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் நவாஸுதீன் சித்திக்.

நவாசுதீன் சித்திக்-க்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர். இதில் ஒரு சகோதரியான ஷியாமா சித்திக் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 26.  ஷியாமா 18 வயதில் இருக்கும் போது அவருக்கு மார்பகப் புற்றுநோய்  ஏற்பட்டுள்ளது. 

இதனால் கடந்த 8 ஆண்டுகளாகச் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இறுதி சடங்குகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. நவாஸுதீன் சித்திக்குக்கு பல பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.


Advertisement