திடீரென மனம்மாறி அரசியலில் குதித்த பிரபல நடிகர்! எந்த முன்னணி கட்சியுடன் இணைந்துள்ளார் தெரியுமா?

திடீரென மனம்மாறி அரசியலில் குதித்த பிரபல நடிகர்! எந்த முன்னணி கட்சியுடன் இணைந்துள்ளார் தெரியுமா?


famous-actor-join-in-admk-party

தமிழ் சினிமாவில் ஜீவா நடித்து வெளிவந்த ஆசை ஆசையாய் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் ரவி மரியா.

முதலில் வெயில் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான அவர்  அதனை தொடர்ந்து மனங்கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, ஹரஹர மகாதேவகி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சார்லி சாப்ளின் பல படங்களில் காமெடி வில்லனாக நடித்துள்ளார்.

ravi mariya

இந்நிலையில் ரவி மரியா தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். மேலும் அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் அதிமுக கட்சியில் இணைந்தார். 

ravi mariya

இதுகுறித்து கூறுகையில் எனது தந்தை தீவிர எம்ஜிஆர் பக்தர். எனக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது. இந்நிலையில் சமீபகாலமாக முதல்வர் மற்றும் துணை முதல்வரின் ஆட்சி சிறப்பாக இருப்பதை கண்டு அவர்களின் கட்சியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று முதல்வர் மற்றும் துணைமுதல்வர் முன்னிலையில் நான் அதிமுக கட்சியில்  இணைந்தேன்.மேலும்  வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்காக தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்ய உள்ளேன் என கூறியுள்ளார்.