அவரா?? தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் இணைந்த முன்னணி நடன இயக்குனர்!! யார் தெரியுமா??

அவரா?? தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் இணைந்த முன்னணி நடன இயக்குனர்!! யார் தெரியுமா??


Famous actor and dance master sathiesh krishnan joins in Beats movie

தளபதி விஜய் நடித்துவரும் பீட்ஸ் படத்தில் நடன இயக்குனர் ஒருவர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீட்ஸ் படத்தில் நடித்துவருகிறார் விஜய். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு காட்சிகள் சென்னையில் முடிவடைந்த நிலையில் விரைவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு டெல்லியில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

vijay

இந்நிலையில் தளபதியின் பீட்ஸ் படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகன் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளிவந்தது. தற்போது, நடிகர் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் பீட்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீட்ஸ் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துவருகின்றனர். படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.