சினிமா

அவங்களையும் விட்டு வைக்கலையா.. விஜய் தரப்பில் இருந்து வெளிவந்த உண்மை! செம ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

சமீப காலமாக சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயர்களில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டு புகை

சமீப காலமாக சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயர்களில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டு புகைப்படங்களை வெளியிடுவது, பிற நடிகர்களுக்கு மெசேஜ் செய்வது, மேலும் பட வாய்ப்பு தருவதாக  ஏமாற்றுவது என தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் இதுகுறித்து பல பிரபலங்களும் புகாரளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோர் பெயரிலான டுவிட்டர் கணக்குகள் சமீபகாலமாக  மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறது. மேலும் அதில் யாரும் கண்டிராத பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ட்விட்டர் கணக்குகளை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

ஆனால் உண்மையில் அவை போலியான டுவிட்டர் கணக்குகளாம். இந்நிலையில் இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா இருவருமே எந்த சமூகவலைத்தளங்களிலும் கிடையாது. அவர்களது பெயர்களில் உள்ள போலியான கணக்குகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


Advertisement