வலிமை படத்தின் ஒரு நாள் வசூலை ஒரே வாரத்தில் ஓவர் டேக் செய்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம்...! கசிந்த அதிர்ச்சி தகவல்....

வலிமை படத்தின் ஒரு நாள் வசூலை ஒரே வாரத்தில் ஓவர் டேக் செய்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம்...! கசிந்த அதிர்ச்சி தகவல்....


ethrkum-thuninthvan-vasool-saathanai

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார். இவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா, சுசித்ரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மாதம் 24ஆம் தேதி வெளிவந்த வலிமை திரைப்படம்  தற்போது  தமிழகத்தில் மட்டுமே சுமார் 34 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

வலிமை படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில்  பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மார்ச் 10 ஆம் தேதி வெளிவந்த  திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில்  நடிகை ப்ரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும்  தேவதர்ஷினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, ராதிகா, சூரி, புகழ், தங்கதுரை உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக  தகவல்  வெளியாகியுள்ளது.

அஜித்தின் வலிமை திரைப்படம் தமிழகத்தில் ஒரு நாளில் வசூல் செய்த தொகையை எதற்கும் துணிந்தவன் படம் ஒரு வாரத்தில் வசூல் செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.