சினிமா

ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா! தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி

Summary:

Enai nokki payum dhotta releasing date

இயக்குனர் கௌதவ் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பாகவே துவங்கப்பட்ட படம் எனை நோக்கி பாயும் தோட்டா. தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ள இந்த படம் ஒரு வரடத்திற்கு முன்பாகவே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் இந்த படத்தின் பாடல்கள் மட்டும் வெளியாகி மிகவும் பிரபலமடைந்தன. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் இந்த படம் வெளியாகவில்லை. 

இந்நிலையில் பல பிரச்சினைகளை கடந்து எனை நோக்கி பாயும் தோட்டா வரும் நவம்பர் 29  ஆம் தேதி வெளியாகிறது என்று இயக்குனர் கௌதவ் வாசுதேவ் மேனன் தற்போது அறிவித்துள்ளார். 

தற்போது தனுஷின் அசுரன் படம் வெளியாகி நல்ல வெற்றி பெற்றுள்ள நிலையில் நீண்ட நாட்களாக காத்திருந்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாகிறது என்ற செய்தி தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement