இது என்ன அதிசயமா இருக்கு! இப்படியொரு குளறுபடி எங்கையும் நடந்துருக்காது! அதிர்ச்சியில் அதிகாரிகள்!

இது என்ன அதிசயமா இருக்கு! இப்படியொரு குளறுபடி எங்கையும் நடந்துருக்காது! அதிர்ச்சியில் அதிகாரிகள்!


election-confusion-in-assam

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1 மற்றும் மூன்றாம் கட்ட தேர்தல் இன்றும் நடைபெறுகிறது.

இந்நிலையில் திமா ஹாசோ தொகுதிக்குட்பட்ட ஹப்லாங் பகுதியில் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அங்கு ஒரு வாக்குச்சாவடியில் மொத்தமே வாக்காளர்களின் எண்ணிக்கை 90 ஆக இருக்கும் நிலையில், 171 வாக்குகள் பதிவாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

election

 இந்த குளறுபடியால் வாக்குச் சாவடியில் பணியிலிருந்த 5 தேர்தல் அலுவலர்களை மாவட்ட தேர்தல் அதிகாரி பணியிடைநீக்கம் செய்துள்ளார். அங்கு மறுவாக்குபதிவு நடைபெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்ட போது, அரசின் வாக்காளர் பட்டியலை ஏற்க மறுத்து அந்த கிராமத்தின் தலைவர் புதிய வாக்காளர் பட்டியல் ஒன்று அளித்ததாகவும், அதன்படியே தேர்தல் நடைபெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.