மாலத்தீவில் அந்த மாதிரி ஆட்டம் போட்ட எதிர்நீச்சல் சீரியல் பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ.?



Edhirneechal serial actress latest photos

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பிரியதர்ஷினி . இவர் ஆரம்பகாலங்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக களமிறங்கினார். இவரது சகோதரி டி டி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினியும் பிரபலமான தொகுப்பாளினி தான்.

suntv

பிரியதர்ஷினி டான்ஸ் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். குழந்தை நட்சத்திரமாக பாக்கியராஜின் 'தாவனிகனவுகள்' படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்தார்.

சின்னத்திரையில் மிகவும் பிஸியாக இருந்த பிரியதர்ஷினி, பிறகு திருமணமாகி குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் கவனம் செலுத்தினார். தற்போது 2 வருடங்களுக்குப்  பிறகு, மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கியுள்ள பிரியதர்ஷினி, எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கேரக்டரில் சிறப்பாக நடித்து வருகிறார்.

suntv

சமூகவலைத்தளங்களிலும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியதர்ஷினி, தற்போது மாலத்தீவில் கிளாசிக் நடனமாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை இணையத்தில் தற்போது வைரலாகி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.