இணையத்தில் கசிந்த ஈஸ்வரன் பட புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை! முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் சுசீந்திரன் !



easwaran-movie-simbu-snake-catching-photo-viral

சிம்பு நடிப்பில்,  இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் மாதவ் மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன்.  இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் பாரதிராஜா, மனோஜ், நந்திதா, பால சரவணன், முனீஸ்காந்த், யோகி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலானது. அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் ஒருவர் வனத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

simbu

இது பெரும் பரபரப்பை கிளப்பியநிலையில், இயக்குனர் சுசீந்திரன், அந்த காட்சி பிளாஸ்டிக் பாம்பை வைத்து படமாக்கப்பட்டது எனவும், மேலும் அந்த புகைப்படத்தை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை, கிராபிக் செய்யும்போது லீக்காகியுள்ளது. மேலும் அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் கூறி விளக்கமளித்துள்ளார். மேலும் இதற்கிடையில் வனத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து அவர்களுக்கும் தெளிவுபடுத்தியதாகவும் இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.