கோவாவிற்கு சென்றபோது ஏமாற்றிவிட்டார்! கவர்ச்சி குத்தாட்ட நடிகை மீது கார் டிரைவர் பரபரப்பு புகார்!

கோவாவிற்கு சென்றபோது ஏமாற்றிவிட்டார்! கவர்ச்சி குத்தாட்ட நடிகை மீது கார் டிரைவர் பரபரப்பு புகார்!


driver-complaint-on-mumaith-khan-for-cheating-him

தென்னிந்திய சினிமாவுலகில் பெரும் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் முமைத் கான். 2002 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்  என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார். இந்நிலையில் தற்போது கார் ஓட்டுநர் ராஜு என்பவர் நடிகர் முமைத்கான் தனக்குத் தர வேண்டிய ரூ.15000-த்தை தராமல் ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Mumaith khan

நடிகை முமைத்கான் மூன்று நாள் பயணமாக கோவா செல்ல தன்னிடம்  கார் புக் செய்ததாகவும், ஆனால் அங்கு 8 நாட்கள் தங்கிவிட்டு தனக்கு கொடுக்கவேண்டிய ரூ.15000 பணத்தை தரவில்லை எனவும் டிரைவர் ராஜு என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அதன் ஆதாரமாக முமைத் கான் அனுப்பிய கோவா முகவரி, சுங்கச்சாவடிகளில் பணம்கட்டிய ரசீது போன்றவற்றையும் ஒப்படைத்துள்ளார். இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

முமைத்கான் ஏற்கனவே போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி விசாரணை மேற்கொள்ளப்பட்டவர்  என்பது குறிப்பிடத்தக்கது