சினிமா

மனம் மிகவும் வேதனை அடைகிறது - நடிகை த்ரிஷா வருத்தம். ஏன் தெரியுமா?

Summary:

drisha feel about child sex abuse

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மோகினி’. இப்படம் ஜூலை 27-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மோகினி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று  நடைபெற்றது இதில் நாயகி த்ரிஷா, இயக்குனர் மாதேஷ், தயாரிப்பாளர் லட்சுமன், நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன், கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய திரிஷா கூறுகையில் 
நான் இந்த படத்தில் மோகினி மற்றும் வைஷ்ணவி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் முதன் முதலில் நடித்துள்ள இரட்டை கதாபாத்திரம் இது தான் என திரிஷா கூறினார்.

மேலும், தினம் தினம் காலை எழுந்து செய்திதாளை படித்தால், அதில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றி தான் செய்தி அதிகமாக உள்ளது. அந்த செய்திகளை படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. அந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்பு தான் இருக்கும். இச்சம்பவங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும் மோகினி படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம்.

இப்படத்தில் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் நிறைய விஷயங்கள் உள்ளது. படத்தை லண்டன், பாங்காக் போன்ற வெளிநாட்டில்  படமாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.


Advertisement