சினிமா

வெறித்தனமாக மிரட்டும் திரௌபதி ட்ரெய்லர்! டிரெண்டிங்கில் 2 ம் இடம் பிடித்து அசத்தல்!

Summary:

draupathi trailer treanding


மோகன் என்பவரால் இயக்கப்பட்டுள்ள திரௌபதி திரைப்படத்தில் நாயகனாக ரிச்சர்ட் ரிஷி, நாயகியாக ஷீலா ராஜ்குமாரும் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு ஜூபின் இசையமைக்குகிறார். இத்திரைப்படம் நாடகக்காதல்களை விரட்டியடிக்கும்  திரைப்படமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்ததும் திரைத்துறையில் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் நேற்று மாலை திரௌபதி படத்தின் டிரைலர் வெளியாகி, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. திரௌபதி டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் யூடியூப் டிரெண்டிங்கில் 2 ம் இடம் பிடித்தது. தமிழ் சினிமா வரலாற்றில், கூட்டுத் தயாரிப்பு (Crowd Funding) முறையில் தயாராகும் முதல் படம் இதுவாகும்.

மண்ணும் பெண்ணும் எங்களுக்கு ஒன்னு தான் இதில் யார் கை வைத்தாலும் வெட்டுவோம் என்ற வசனத்தை இயக்குனர் மோகன் திரௌபதி டிரைலரில் வெளியிட்டுள்ளார். 


Advertisement