டியர் விஜய் சார், சிலம்பரசன் சார்..! இது தற்கொலைக்கு சமம்..! எங்களுக்கு மூச்சுவிட நேரமில்லை.! மருத்துவரின் உருக்கமான பதிவு.!

டியர் விஜய் சார், சிலம்பரசன் சார்..! இது தற்கொலைக்கு சமம்..! எங்களுக்கு மூச்சுவிட நேரமில்லை.! மருத்துவரின் உருக்கமான பதிவு.!


doctor request to vijay and simbu

தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. சமீபத்தில், நடிகர் விஜய் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார்.

இந்தநிலையில், வரும் பொங்கலுக்கு விஜய் நடித்த "மாஸ்டர்" திரைப்படமும், சிம்பு நடித்த "ஈஸ்வரன்" திரைப்படமும் வெளியாகிறது. இதனால் கொரோனா சமயத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதித்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகை சேர்ந்த நபர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் மருத்துவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த பதிவில், டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் தமிழக அரசே, என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் சோர்வாக இருக்கிறார்கள். சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர். மூச்சுவிட நேரம் வேண்டும், சிலரின் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.

கொரோனா சூழலில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதிப்பது தற்கொலைக்கு சமம். சட்டம் இயற்றுபவர்களோ, ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், மெதுவாக அணையும் தீயை தூண்டிவிட வேண்டாம் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.