ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு! டாக்டர் படத்தின் முக்கிய அப்டேட்டை, அதுவும் வித்தியாசமாக அறிவித்த படக்குழுவினர்! ட்ரெண்டாகும் வீடியோ!

ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு! டாக்டர் படத்தின் முக்கிய அப்டேட்டை, அதுவும் வித்தியாசமாக அறிவித்த படக்குழுவினர்! ட்ரெண்டாகும் வீடியோ!


Doctor movie team announcement about song

நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன்  இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் வில்லனாக வினய் நடிக்கிறார். 

 சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத்  இசையமைத்து வருகிறார்.

doctor

மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.  இறுதியாக சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில் 
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தற்போது டாக்டர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் ஆன செல்லமே பாடல் வரும் ஜூலை 16 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் பாடலின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இணைத்து மிகவும் காமெடியான ஜாலி உரையாடலுடன் நடித்துள்ள வீடியோ மூலம் இதனை அறிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ட்ரெண்டாகி வருகிறது.