சினிமா

நடிகை சமந்தாவின் அடுத்த படம் என்ன தெரியுமா? சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்...!

Summary:

Do you know actress Samantha's next film? Shocking info just before ...!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை இயக்கி வருபவர் தான் இயக்குனர் விக்ரம் குமார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல வெற்றி படங்களையே தனது ரசிகர்களுக்காக அதிகம் தருவார். 

இந்த இயக்குனர் தமிழில் அலை, யாவரும் நலம் மற்றும் 24 உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றியை கண்டுள்ளார். மேலும் அவர் தெலுங்கில் இஷ்க், மனம் மற்றும் ஹலோ போன்ற படங்களை இயக்கி உள்ளார்.

தற்போது அவர் மீண்டும் தெலுங்கில் ஒரு படத்தை இயக்க போவதாக தகவல் வெளியானது. அந்த தெலுங்கு படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும் அந்த படத்தில் ஆக்ஷனுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

அந்த படத்தில் நடிகை சமந்தாவை நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க இயக்குனர் விக்ரம் குமார் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
அவ்வாறு சமந்தா நடிக்க சம்மதித்தால் 24 மற்றும் மனம் ஆகிய படங்களுக்கு அடுத்த படியாக மீண்டும் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கும் மூன்றாம் படம் ஆகும்.


Advertisement