சினிமா

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன வேதம் படநடிகை! அவரது தற்போதைய நிலையைப் பார்த்தீர்களா!

Summary:

Divya unni latest photo viral

தமிழ் சினிமாவில் சபாஷ்,  கண்ணன் வருவான்,  பாளையத்து அம்மன்,  வேதம் போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை திவ்யா உன்னி. அவர் தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் நடித்துள்ளார். நடிகை திவ்யா உன்னி பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம் போன்ற கலாச்சார நடனங்களை முறைப்படி கற்றவர். மேலும் அதற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.

 இந்நிலையில் திவ்யா உன்னி 2002 ஆம் ஆண்டு சுதிர்சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் 2016 ஆம் ஆண்டு பிரிந்தனர். அதனை தொடர்ந்து திவ்யா உன்னி அருண் குமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். மேலும் அங்கு அவர் முறைப்படி நடனப்பள்ளி ஒன்றை வைத்து பெருமளவில் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை திவ்யா உன்னி தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். மேலும் அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து திவ்யா உன்னி தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில்வைரலாகி வருகிறது. மேலும் அப் புகைப்படத்தில் திவ்யா உன்னி  ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். 


Advertisement