சினிமா

தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்! நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா விடுத்த அதிரடி கோரிக்கை! என்ன தெரியுமா?

Summary:

Divya sathyaraj request for job opportunity for tamil people

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா. இவர்  பிரபல ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்.  கொரோனா ஊரடங்கால் சிறு தொழிலாளர்கள் வேலையை இழந்து பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது குறித்தும், அவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தும் கோரிக்கை விடுத்து சமீபத்தில் திவ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கொரனோ ஊரடங்கு காரணமாக வருமானமின்றி பல கம்பெனிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில்,  அவர்களால் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. மேலும் பல தொழிலாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும்  வேலை வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில்  வேலைவாய்ப்புகளில் 70% தமிழர்களுக்கே முன்னுரிமை தர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் தமிழர்களை புறக்கணிப்பதில் எந்த நியாயமும் கிடையாது என கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களை விரைவில் சந்திக்கவுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement