சீனுராமசாமியுடன் இணையும் புதிய கூட்டணி..!!

சீனுராமசாமியுடன் இணையும் புதிய கூட்டணி..!!


directorseenuramasamynextflim

'ஒரு கல் ஒரு கண்ணாடி' மூலம் தமிழ்த் திரை உலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். அதைத் தொடர்ந்து ஒரு சில படங்கள் வெற்றியடைந்தாலும், சமீப காலமாக அவர் நடித்துவரும் படங்கள் எதுவும் பெரிய வெற்றி எதுவும் பெறவில்லை.

தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின், தான் அடுத்து நடிக்கப் போகும் படம் பற்றிய அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார் உதயநிதி.

விஜய் சேதுபதியை வைத்து, 'தென்மேற்கு பருவக் காற்று', 'தர்மதுரை' உள்ளிட்ட வெற்றி படங்களைக் கொடுத்து விருதுகளைப் பெற்ற சீனு ராமசாமியுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சீனுராமசாமியுடன் பணிபுரியும்போது, அதைப்பற்றிய சந்தேகமே எழுவது இல்லை. அப்படிப்பட்ட ஒரு அழகான படத்தின் ஒரு பகுதியாக இருப்பது, எனக்கு கிடைத்த பரிசு. அவருடைய படங்கள் எப்போதும் உண்மையான அன்பையும், நம்பிக்கையையும் கற்று தரும். அவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்” என்கிறார், உதயநிதி ஸ்டாலின்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சீனு ராமசாமி தற்போது விஜய் சேதுபதியை வைத்து 'மாமனிதன்' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.