தொடர்ந்து ரசிகர்களின் பொறுமையை சோதித்து வரும் இயக்குனர்கள்.! என்ன நடந்தது.?

தொடர்ந்து ரசிகர்களின் பொறுமையை சோதித்து வரும் இயக்குனர்கள்.! என்ன நடந்தது.?


Directors decrease movie duration time

அந்த காலத்தில் வெளி வந்த தமிழ் திரைப்படங்கள் பெரும்பாலும் மூன்று மணி நேரத் திரைப்படங்களான இருந்தன. ஆனால் அப்போது இருந்த மக்கள் அந்தத் திரைப்படங்களை எல்லாம் மிகவும் ரசித்து பார்க்க கூடிய அளவுக்கு பொறுமையாக இருந்தார்கள் எனலாம். 

Theater

1970 ஆண்டுவாக்கில் தான் திரைப்படங்களின் நேர அளவு இரண்டரை மணி நேரம் என்று கொஞ்சம் மாற்றி அமைத்தார்கள். ஆனால் அதன் பின்னும் ஒரு சில படங்கள் மூன்று மணி நேரத்தைத் தொட்டு வெளியாகின. அதே போல் 2005ம் ஆண்டு வெளிவந்த "தவமாய் தவமிருந்து" அதிக நேரம் கொண்ட திரைப்படமாகும்.

இப்படம் மொத்தம் 3 மணி நேரம் 24 நிமிடங்கள் கொண்டதாக இருந்தது. இதையடுத்து தற்போது கடந்த சில வருடங்களில், ஒரு சில முன்னணி இயக்குனர்களே இரண்டரை மணி நேரத்தை தாண்டிய படங்களை கொடுத்து வருகிறார்கள். அதன்படி வாரிசு 2 மணி நேரம் 47 நிமிடங்கள் கொண்டதாக இருந்தது.

Theater

தொடர்ந்து ஜெயிலர், லியோ ஆகிய திரைப்படங்களும் 2 மணி நேரம் 48நிமிடங்கள் ஓடக்கூடிய படங்களாக இருந்தன. தற்போது "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" திரைப்படம் 2 மணி நேரம் 52 நிமிடம் ஓடக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது நிச்சயம் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் என்று தெரிகிறது.