இயக்குனர் விஜய்க்கு குழந்தை பிறந்தாச்சு! உற்சாகத்தில் குவியும் வாழ்த்துக்கள்!

இயக்குனர் விஜய்க்கு குழந்தை பிறந்தாச்சு! உற்சாகத்தில் குவியும் வாழ்த்துக்கள்!


director-vijay-blessed-with-boy-baby

தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான கிரீடம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல் விஜய். அதனை தொடர்ந்து அவர் மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, சைவம், தேவி, வனமகன் உள்ளிட்ட பல வெற்றித்திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தெய்வத் திருமகள் படத்தை இயக்கியபோது இவருக்கும், அமலாபாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனைதொடர்ந்து இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

vijay

ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு,  இருவரது திருமண வாழ்க்கையும் நீடிக்கவில்லை. இரண்டு வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து செய்தனர். பின்னர் பெற்றோர்களின் வற்புறுத்தலை தொடர்ந்து ,இயக்குனர் விஜய் கடந்த ஆண்டு  சென்னை மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பொதுநல மருத்துவரான ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இன்று இயக்குனர் விஜய் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.