புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"ஒரு படத்திற்கு வணிகரீதியான வெற்றி மட்டுமே போதாது" இயக்குநர் தங்கர் பச்சான் ஆவேசம்..
தமிழ்த் திரையுலகில், பல மாறுபட்ட கதைக்களத்தில் திரைப்படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர் தங்கர் பச்சான். இவர் அழகி, சொல்லமறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி, களவாடிய பொழுதுகள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு,"கருமேகங்கள் கலைகின்றன" என்ற படத்தை இவர் இயக்கியுள்ளார். VAU மீடியா துரை வீரசக்தி தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இயக்குனர்கள் பாரதிராஜா, கெளதம் மேனன், அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமலஹாசன் அலுவலகத்தில் வெளியிட்ட பிறகு, தங்கர் பச்சான் அளித்த பேட்டியில், "நான் என் முதல் படமான அழகியை இயக்குவதற்கு முன் கிட்டத்தட்ட 40 படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை செய்தேன். ஆனால் அப்படத்தை வெளியிட யாரும் அப்போது முன்வரவில்லை. ஆனால் படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ஒரு பெரிய நடிகர் நடிக்கிறார், 500 கோடி பட்ஜெட் என்பது மட்டுமே படத்தை பார்ப்பதற்கு போதுமானதாக இருக்கிறது. அப்படியான படங்களில் என்ன கதை இருக்கும்? கொலை, வன்முறை போன்ற காட்சிகளில் என்ன கருத்து இருக்கும்? இந்தப் படங்களின் வெற்றி தொடர்ந்து இந்த மாதிரி படங்களையே ஊக்குவிக்கும். நல்ல கதைக்களம் தான் முக்கியம்." என்று அவர் கூறினார்.