இயக்குனர் தங்காபச்சானின் மகனா இது? முதல் முறையாக வெளியான புகைப்படம் உள்ளே!

இயக்குனர் தங்காபச்சானின் மகனா இது? முதல் முறையாக வெளியான புகைப்படம் உள்ளே!



Director thangar bachan son photo

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை இயக்கும் ஒருசில இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் தங்கர்பச்சான். இவரது இயக்கத்தில் வெளியான அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

இவர் ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி 40 க்கு அதிகமான படங்களில் ஒளிப்பதிவாளராகவும், பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக இவர் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என யாருக்கும் தெரியாத நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது 10 வது படத்தை இயக்கவுள்ளார் தங்கர்பச்சான்.

இந்த படத்தில் அவரது மகன் விஜித் பச்சானை ஹீரோவாக சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிலனா, அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தனக்கு ஆதரவு கொடுத்ததுபோலவே தனது மகனுக்கும் ஆதரவு கொடுங்கள் என கேட்டுள்ளார் தங்கர்பச்சான்.