சினிமா

எவனோ ஒருவன் பட இயக்குனர் நிஷாந்த் காமத் காலமானார்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

Summary:

Director Nishikanth kamath dead

எவனோ ஒருவன் திரைப்பட இயக்குனர் நிஷிகாந்த் காமத் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிஷிகாந்த் காமத் 2005-ம் ஆண்டு மராத்தியில் வெளியான டொம்பிவலி ஃபாஸ்ட் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.  மேலும் அப்படத்தை அவர் தமிழில் மாதவன், சங்கீதா நடிப்பில் எவனோ ஒருவன் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அதனை தொடர்ந்து நிஷிகாந்த் நடிகர் அஜய் தேவ்கன், தபு நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை  பெற்ற திரிஷ்யம் படத்தை இயக்கினார். 

50 வயது நிறைந்த நிஷிகாந்த் காமத் கடந்த 2 ஆண்டுகளாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் அவர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement