'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாம்' இரங்கல் போஸ்டரிலும் என்ன ஒரு கலைநயம்.!

'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாம்' இரங்கல் போஸ்டரிலும் என்ன ஒரு கலைநயம்.!


director-mahendiran---gobi-prasanna---sad-poster

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வயது 79 வயது நிரம்பிய மகேந்திரன் சிகிச்சை பலனின்றி காலமானார். 

1978-ம் ஆண்டு வெளிவந்த "முள்ளும் மலரும்" படம் மூலம் அறிமுகம் ஆனவர் இயக்குநர் மகேந்திரன். இதனையடுத்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை போன்ற பிரபல தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர் இயக்குநர் மகேந்திரன். 

mahenthiran

1980ல் இவா் இயக்கிய நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற ஒரே படத்தின் மூலம் 3 தேசிய விருதுகளை பெற்றிருந்தாா். இவருக்கு ரஜினி, கமல், இளையராஜா, பாரதி ராஜா, உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். நேரில் வரமுடியத பலர் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர்.

இந்நிலையில் இயக்குனர் மகேந்திரனின் மறைவுக்கு சூப்பர் டீலக்ஸ், விக்ரம் வேதா, ஆரண்ய காண்டம், கத்தி, மெர்சல், சர்கார், உள்ளிட்ட பல படங்களுக்கு போஸ்டர் வடிவமைத்த கோபி பிரசன்னாவின் போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. 

மகேந்திரனின் இயக்கத்தில் வெளியான உதிரிப்பூக்கள் படம் வெற்றிப்படம் என்பதால் அதை மையமாக வைத்து, ஒரு ரோஜா காம்பு மட்டும் இருப்பது போன்றும், இதழ்கள் எல்லாம் உதிர்ந்தது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார்.