என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
இன்னும் ஒரு மாதம் வெயிட் பண்ணுங்க - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு வேண்டுகோள்..! தரமான சம்பவம் இருக்கு போல..!!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின்னர் விஜய் நடிக்கும் தளபதி 67-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மாஸ்டர் படம் இவர்களின் கூட்டணியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதனால் விஜயின் 67-வது படத்திற்கும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும், அவருக்கு வில்லன்களாக ஆறு முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒரு வில்லன் நடிகரை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், தளபதி 67 படத்தின் அப்டேட் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். மேலும் "வாரிசு படத்தின் அப்டேட் வெளிவராமல் தளபதி 67 படத்தின் அப்டேட்டை வெளியிட முடியாது என்றும், இவ்வளவு நாட்கள் காத்திருந்த ரசிகர்கள் இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள்" என்று வேண்டுகோளை விடுத்துள்ளார்.