படம் வெளியாவதற்கு முன்பே உயிரிழந்த இயக்குனர்! சிகிச்சைக்கு பணமின்றி வறுமையில் தவித்த பரிதாபம்!

படம் வெளியாவதற்கு முன்பே உயிரிழந்த இயக்குனர்! சிகிச்சைக்கு பணமின்றி வறுமையில் தவித்த பரிதாபம்!



director-dead-before-releasing-his-first-movie

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த உலகமே பெரும் அச்சத்தில் மூழ்கியிருக்கும் நிலையில்,  கொரோனோவை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய ஊரடங்கால்  திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்தவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமித்ரன். இவர் இயக்குனர் சுகிமூர்த்தியிடம் உதவி இயக்குனராக இருந்தார். பின்னர் நீண்ட வருட போராட்டத்திற்கு பிறகு உடுக்கை என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் 5 நாட்கள் படப்பிடிப்புகள் மட்டுமே  மீதமிருக்கும் நிலையில்  கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்தானது.

Balamithran

இதனை தொடர்ந்து அவர் படத்திற்கான எடிட்டிங் மற்றும் பின்னணி வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததார். மேலும் அவரிடம் மருத்துவமனைக்கு பணம் கட்ட வசதி இல்லாதநிலையில் இயக்குனர் சங்கத்தின் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் வாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பாலமித்ரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி இருகுழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தான் இயக்கிய முதல் படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனர் பாலமித்ரன் உயிரிழந்தது பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.