மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
"அஜித் இப்படி ஏமாற்றுவார் என்று நினைக்கல" பிரபல தயாரிப்பாளரின் சர்ச்சையான பேட்டி.!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தனது சினிமா வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்திருந்தாலும், தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் உயர்ந்து தனக்கான தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார்.
பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கும் அஜித்தை தல என்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்றும் ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
இதன்பிறகு தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் கதாநாயகனாக நடிக்க அஜித் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது போன்ற நிலையில் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித்தை குறித்து யூ ட்யுபில் பேட்டியில் பேசியிருக்கிறார்.
அப்பேட்டில் அவர் கூறியதாவது, "அஜித்தை போல் ஒரு மோசடிக்காரரை பார்க்கவே முடியாது. என்னிடம் பணம் வாங்கிவிட்டு வாங்கவே இல்லை என்று கூறிவிட்டார். அதற்கு ஆதாரம் என்னிடம் இருக்கிறது" என்று பேட்டியில் பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அஜித்தின் ரசிகர்களின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.