17 ஆண்டு உறவு முறிவு! மனைவியை விவாகரத்து செய்த பிரபல முன்னணி இயக்குனர்! அதிர்ச்சியில் திரையுலகம்!!



director-bala-divorced-her-wife-MSY3UE

தமிழ் சினிமாவில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி போன்ற வெற்றி படங்களை இயக்கி, முன்னணி இயக்குநராக கொடிகட்டி பறப்பவர் பாலா. அவர் தற்போது சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

பாலா கடந்த 2004 ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிரார்த்தனா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் பாலாவிற்கும், அவரது மனைவிக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்ததாகவும், இருவரும் தனிதனியாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

bala

இந்த நிலையில் அவர்கள் இருவரும் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து  திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர் இருவருக்கும் கடந்த மார்ச் 5ஆம் தேதி சட்டப்படி விவாகரத்து கிடைத்துள்ளது. அவருடைய திடீர் விவாகரத்து திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.