இயக்குனரை மறைமுகமாக கடுப்பாக்கிய குக் வித் கோமாளி அஸ்வின் .. இன்னுமா இந்த AK சம்பவம் முடியல?..!

இயக்குனரை மறைமுகமாக கடுப்பாக்கிய குக் வித் கோமாளி அஸ்வின் .. இன்னுமா இந்த AK சம்பவம் முடியல?..!


Director Arivazhagan Troll by Actor Ashwin Kumar 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் அஷ்வின் குமார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சன் டிவி தொலைக்காட்சிக்கு நேர்காணலும் அளித்திருந்தார். 

அதனைத்தொடர்ந்து, சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அவருக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், அவர் நடித்த பட இசைவெளியீட்டு விழாவில் பேசுகையில் எழுத்தாளர்களை அவமதிக்கும் வகையில் நான் கதை பிடிக்கவில்லை என்றால் உறங்கிவிடுவேன் என்று கூறியிருந்தார். 

Actor Ashwin Kumar

இந்நிலையில், அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் அறிவழகனை விமர்சித்து பதிவு செய்துள்ளார். அறிவழகனின் இயக்கத்தில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸில் அஸ்வின் தொடர்பான காட்சி உள்ளது. 

அக்காட்சியில் அஸ்வினின் பெயர் AK என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஸ்வின் இயக்குனர் அறிவழகனை குறிப்பிடாமல் #BraiinlessBeauty Shame On You என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.