நீ பிரியாணி சாப்ட மட்டும்தான் லாயக்கி - சூர்யா மீது கடுப்பாகி கத்தினாரா இயக்குனர்?.. அவரு ரொம்ப நல்ல மனுஷன்பா..! 

நீ பிரியாணி சாப்ட மட்டும்தான் லாயக்கி - சூர்யா மீது கடுப்பாகி கத்தினாரா இயக்குனர்?.. அவரு ரொம்ப நல்ல மனுஷன்பா..! 


Director Angry with Surya

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் சூர்யா. சமீபத்தில் இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் லிஸ்டில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இவர் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான சிவகுமாரின் மூத்த மகனாவார்.

இவருக்கு திரையுலகம் புதிதில்லை என்றாலும், வாய்ப்புகள் ஈசியாக கிடைக்கவில்லை. இவரின் முதல் படம் நடிகர் விஜய்யுடன் நடித்த நேருக்கு நேர் ஆகும். இப்படத்தை இயக்குனர் வசந்த் இயக்கியிருந்த நிலையில், முதல் படம் என்பதால் சூர்யா எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓகே சொல்லி இருக்கிறார்.  

தொடர்ந்து சூர்யாவால் ஒரு காட்சியில் சரியாக நடிக்க முடியவில்லை. இதனால் பல டேக்குகள் போனதால், இயக்குனர் படப்பிடிப்புக்கு பிரேக் கொடுத்து அனைவரையும் சாப்பிட அனுப்பிவைத்துவிட்டாராம். இந்த நிலையில், சாப்பிட சென்ற சூர்யா பிரியாணி சாப்பிட்டுவிட்டு, சார் பிரியாணி நல்லா இருக்கு போய் சாப்பிடுமாறு கூறியிருக்கிறார். 

surya

இதில் கடுப்பான வசந்த் நீயெல்லாம் பிரியாணி திங்க மட்டும்தான் லாயக்கி. உனக்கு நடிப்பெல்லாம் சரி வராது என்று கூறிவிட்டாராம். அனைவரது முன்னும் இப்படி ஒரு வார்த்தை கூறியது சூர்யாவிற்கு பெரிய அவமானமாக தோன்றிவிட்டதால், தீவிரமாக உழைத்து அப்படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். 

இதுவே சூர்யாவின் முதலும் கடைசிமான அவமானம் என்று கூறப்படுகிறது. இது குறித்த தகவல் வதந்தியா அல்லது உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது வரை அனைவருக்கும் உதவும் நல்லெண்ணம் உள்ளவராய் தான் சூர்யா இருக்கிறார்.