தனது நீண்டநாள் காதலியை கரம்பிடித்த பிரபல இயக்குனர்!! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!!

தனது நீண்டநாள் காதலியை கரம்பிடித்த பிரபல இயக்குனர்!! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!!


director-anand-shankar-got-marriage

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு மற்றும் பிரியா ஆனந்த் இருவரும் இணைந்து நடித்த அரிமா நம்பி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஆனந்த் ஷங்கர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்தது.

இதனை தொடர்ந்து அவர் விக்ரம் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான இருமுகன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். பின்னர் விஜய் தேவரகொண்டா நடிப்பில், தமிழ்  தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவான 'நோட்டா' படத்தையம் இயக்கியுள்ளார். இவர் முன்னணி நடிகரான ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

anand shankar

இந்நிலையில் ஆனந்த் ஷங்கர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான திவ்யங்கா என்பவரை இன்று கரம் பிடித்தார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

anand shankar