இந்தியா சினிமா

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் தூக்கிட்டு தற்கொலை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Summary:

Dhoni biopic hero sushant singh commit suicide

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனியின் சுயசரிதை படத்தில் தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்  தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான தோனியின் வாழ்க்கையையே மையமாக கொண்டு உருவான சுயசரிதை படத்தில் தோனியின் கதாபாத்திரமாக, படத்தின் நாயகனாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இந்த படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

பல்வேறு முன்னணி படங்களில் நடித்துள்ள இவர்  தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.இந்நிலையில், 34 வயதாகும் இவர் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்திகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்கொலைக்கான காரணம் குறித்து எந்த தகவல்களும் வெளியாகாதநிலையில், அவரின் இந்த முடிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . 


Advertisement