ரஜினியின் இந்த படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் நடிகர் தனுஷ்! எந்த படம் தெரியுமா?

ரஜினியின் இந்த படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் நடிகர் தனுஷ்! எந்த படம் தெரியுமா?


dhanush-rajini

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெறுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு வெளியான அசுரன் படம் மாபெரும் வெற்றிபெற்றது. 

அதனை தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சில நாட்களாகவே வெளியாகாமல் இருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் அந்த படம் தனுஷிற்கு தோல்வியை தழுவியது. 

Dhanush

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினி 30 வருடங்களுக்கு முன்பு நடித்த படத்தை ரீமேக் செய்ய நடிகர் தனுஷ் ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ரஜினிகாந்த் முதன் முதலில் நெகடிவ் வேடத்தில் நடித்து பிரபலமான நெற்றிக்கண் என்ற படத்தை தான் தனுஷ் ரீமேக் செய்ய ஆசைப்படுகிறார். 

மேலும் நடிகர் தனுஷ், பொதுவாக நெகடிவ் வேடத்தில் நடித்தால் மக்கள் வெறுப்பார்கள், ஆனால் ரஜினியின் இந்த பிளேபாய் ரோலை அனைவரும் ரசித்தார்கள் என கூறியுள்ளார். அதனால் தான் இந்த படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படுவதாக தனுஷ் கூறியுள்ளார்.