நான்காவது முறையாக இணையும் கூட்டணி...! ரசிகர்கள் கொண்டாட்டாம்...!

நான்காவது முறையாக இணையும் கூட்டணி...! ரசிகர்கள் கொண்டாட்டாம்...!


dhanush-next-movie-announcement

நான்காவது முறையாக இணையும் கூட்டணி...! ரசிகர்கள் கொண்டாட்டாம்...! 

தனுஷின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில்  வடசென்னை திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரெயிலர்  தான் கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக். சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் இந்த டிரெயிலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தி இருக்கிறது...

வடசென்னை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் மூன்றாவது திரைப்படம். ஏற்கனவே பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் இந்த ஜோடிக்கு இது மூன்றாவது திரைப்படம். அந்த வகையில் இந்த திரைப்படமானது அக்டோபர் 17 ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது...

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் 4வது முறையாகவும் தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை எடுக்கப் போவதாக கூறியுள்ளார். அந்தப் படம் வெக்கை என்ற தமிழ் நாவலை மையப்படுத்திய படமாக உள்ளனர். இந்த நாவலை பூமணி என்பவர் எழுதியுள்ளார் என்பது கூறியுள்ளார்...