16 ஆண்டுகளுக்கு முன் வந்த எம். குமரன் படத்தின் ஷூட்டிங்கில் தனுஷ்! இதுவரை வெளிவராத அரிய புகைப்படம்!

16 ஆண்டுகளுக்கு முன் வந்த எம். குமரன் படத்தின் ஷூட்டிங்கில் தனுஷ்! இதுவரை வெளிவராத அரிய புகைப்படம்!



dhanush-in-m-kumaran-son-of-mahalakshmi-movie-shooting

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கலந்துகொண்ட நடிகர் தனுஷின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி, அசின், நதியா ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம். தந்தையின் உதவி இல்லாமல் தனது மகனை தனி ஆளாக நின்று வளர்க்கும் தாயின் தன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று படமும் ஹிட்டடித்தது.

Jayam ravi

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அசினும், அம்மாவாக நதியாகவும், அப்பாவாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படம் வெளியாகி நேற்றுடன் 16 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் பிரபல நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.

Jayam raviJayam ravi