சினிமா

தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கிடைத்துவிட்டது சென்சார் சர்டிபிகேட்!

Summary:

Dhanush eannai nokki paaium thotta certified as UA

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெறுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு வெளியான வடசென்னை படம் மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால் மாறி 2 பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.

தற்போது அசுரன் படத்தில் பிஸியாக உள்ளார் தனுஷ். அதே நேரத்தில், எனை நோக்கி பாயும் தோட்டா என்னும் படத்தில் தனுஷ் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் பல வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த படம். இந்த படம் வருமா, வராதா என்று ரசிகர்கள் செம்ம ஏக்கத்தில் இருந்தனர்.

இந்த படம் என்னதான் ஆச்சு? ஏதாவது அப்டேட் இருக்கா என கேட்ட ரசிகர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு இந்தப்படம் சென்சார் சர்டிபிகேட்டுக்கு அனுப்பப்படுவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில்  தணிக்கை எல்லாம் முடிந்து UA சான்றிதழை பெற்று வந்துள்ளது இப்படம். தணிக்கை முடிந்துவிட்டதால் படம் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement