தனுஷ்னா சும்மாவா! வேற லெவலில் பட்டையை கிளப்பி, கேப்டன் மில்லர் வீடியோ படைத்த சாதனைl!

தனுஷ்ன்னா சும்மாவா! வேற லெவலில் பட்டையை கிளப்பி, கேப்டன் மில்லர் வீடியோ படைத்த சாதனைl!


dhanush-captain-miller-video-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் கைவசம் தற்போது திருச்சிற்றம்பலம், வாத்தி, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் போன்ற படங்கள் உள்ளன. அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராக்கி, சாணிக்காயிதம் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மிகவும் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படம் 1930 மற்றும் 40களில் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் 3 கேரக்டரில் நடிக்கவுள்ளாராம். இந்நிலையில் அந்த படம் குறித்த அறிவிப்பு வீடியோவை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அந்த வீடியோ பெருமளவில் வைரலாகி 24 மணிநேரத்தில் 5.5 மில்லியனுக்கும் அதிகமான  பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.