வெளியான ஒரே வாரத்தில் தேவராட்டம் வசூல் இவ்வளவா? தயரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவல்!devarattam movie vasool


தமிழ்சினிமாவில் கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இதனை தொடர்ந்து அவர் என்னமோ ஏதோ, வை ராஜா வை, சிப்பாய், இந்திரஜித், இருட்டுஅறையில் முரட்டு குத்து என பல படங்களில் நடித்துள்ளார்.

devarattam

அதனை தொடர்ந்து கார்த்திக் தற்பொழுது குட்டிபுலி படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் இயக்குனராக அறிமுகமான முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, முனீஸ் ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 மேலும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது தேவராட்டம் திரைப்படம் மே 1ஆம் தேதிவெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. இப்படம் சில சர்ச்சைகளில் சிக்கினாலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 

தேவராட்டம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் 5 நாட்களில் 6.5 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கெளதம் கார்த்திக் படங்களில் தேவராட்டம் படம் மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றுள்ளது. படம் தமிழ்நாட்டில் மட்டும் 6.5 கோடி வசூல் செய்துள்ளது. நிச்சயம் வரும் வாரங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்டும் என்று தெரிவித்துள்ளது