எனக்கும், சமந்தாவிற்கும் தவறான தொடர்பா? நாக சைதன்யாவிற்கே அது தெரியும்! உண்மையை உடைத்த டிசைனர்!!

Summary:

எனக்கும், சமந்தாவிற்கும் தவறான தொடர்பா? நாக சைதன்யாவிற்கே அது தெரியும்! உண்மையை உடைத்த டிசைனர்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா அண்மையில் தனது கணவரான நடிகர் நாக சைதன்யாவை பிரிய போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதனைப் போலவே நாக சைதன்யாவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர்களது பிரிவுக்கான காரணங்கள் என பல செய்திகள் வெளிவந்தது. மேலும் சமந்தாவை குறித்து மோசமான கருத்துக்களும் சமூகவலைதளங்களில் பரவத்தொடங்கியது. இதற்கு சமந்தாவும் வேதனையுடன் தனது இன்ஸ்டாவில் விளக்கம் அளித்திருந்தார்.

ஆனாலும் சமந்தாவின் விவாகரத்திற்கு முக்கிய காரணம் ஆடை வடிவமைப்பாளரான ப்ரீத்தம் ஜுகல்கருடன் ஏற்பட்ட நெருக்கமே என்ற தகவல் பெருமளவில் பரவியது. இந்நிலையில் இதுகுறித்து டிசைனர் ப்ரீத்தம் ஜுகல்கர் விளக்கமளித்து கூறியதாவது, இந்த விஷயத்தில் சைதன்யா அமைதியாக இருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது.  நான் சமந்தாவை ‘ஜிஜி‘ என்றுதான் அழைப்பேன். ஜிஜி என்றால் சகோதரி என்று அர்த்தம். நான் அவரை சகோதரியாக நினைக்கும் போது எப்படி எங்களுக்குள் தொடர்பு ஏற்படும்.

எனக்கு சைதன்யாவை பல ஆண்டுகளாக தெரியும். மேலும் எனக்கும் சமந்தாவுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்தும் அவருக்கு நன்றாக தெரியும். இப்படி இருக்கையில் இவ்வாறு வதந்திகள் பரவி வரும்நிலையில் யாரும் அப்படி பேச வேண்டாம் என்று அவர் கூறியிருக்கலாம். அல்லது ஏதேனும் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கலாம். அதனால் ரசிகர்களுக்கு இடையே மாற்றம் ஏற்பட்டிருக்கும். என்னை திட்டி சமூக வலைதளங்களில் கமெண்ட் போடுகிறார்கள். அது எனது மனதை பெரிதும் பாதித்துள்ளது என்று கூறியுள்ளார்.


Advertisement