மன்னிச்சுடு! உன்னை நாய்னு டீசென்டாலாம் நான் சொல்லமாட்டேன் ! மீராமிதுனை வச்சுசெய்த விஜய்டிவி பிரபலம்!

மன்னிச்சுடு! உன்னை நாய்னு டீசென்டாலாம் நான் சொல்லமாட்டேன் ! மீராமிதுனை வச்சுசெய்த விஜய்டிவி பிரபலம்!


deena-nosecut-tweet-against-meera-mitun

சர்ச்சைகளுக்கு பெயர் போன பிக்பாஸ் மீரா மிதுன் சமீபகாலமாகவே பிரபல நடிகர், நடிகைகளை மிகவும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அவர் சமீபத்தில் விஜய், சூர்யா இருவருமே நெபடிசம் ப்ராடக்ட்டுகள் எனவும் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா இருவரையும் மிகவும் மோசமான வார்த்தைகளால் பேசியும் வீடியோ வெளியிட்டிருந்தார்.

 இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து மோசமாக வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகர் தீனாவின் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஏதோ ஒரு நாய் கொறைக்குதாமே?  தெருநாயை சொன்னேன் என்ற பதிவு ஒன்று வெளியானது. இந்நிலையில் தீனா மீராமிதுனைதான் சொல்கிறார் என அவருக்கு ஆதரவாக கமெண்டுகளும் வெளியானது. 

இதனை தொடர்ந்து அந்த ஐடி தனது பெயரிலுள்ள போலியான டுவிட்டர்  கணக்கு என தெரிவித்திருந்த தீனா, நான் மீராவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் நான் அவரை இவ்வளவு மரியாதையாக சொல்ல மாட்டேன். நீங்களும் அவ்வளவு வொர்த்  கிடையாது என அவரது ஸ்டைலிலேயே கலாய்த்து எனது உண்மையான டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.