நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பரிதாபமாக உயிரிழந்த பிரபலம்...! அதிர்ச்சி..!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு நேரலை நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும்போதே பிரபல எழுத்தாளரும், ஜம்மு காஸ்மீர் ஆர்ட் அகாடமியின் செயலருமான ரீடா ஜிதேந்திரா மாரடைப்பால் மரணமடைந்துள்ளது. அந்த சம்பவம் மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தான் DD கஸீர். அந்த தொலைக்காட்சியில் காலை 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி தான் அது. அந்த நிகழ்ச்சியில் அவர் திங்கள் கிழமை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார் என்பது மனதை வருத்தமடைய செய்யும் நிகழ்வு தான்.
இருந்தாலும் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் அந்த தொலைக்காட்சி தொகுப்பாளர்கள். மருத்துவமனை சென்றதும் அங்குள்ள மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது...