முதன்முதலாக தன் விவாகரத்து குறித்து மேடையிலேயே பேசிய டிடி! மிக உருக்கமாக என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

முதன்முதலாக தன் விவாகரத்து குறித்து மேடையிலேயே பேசிய டிடி! மிக உருக்கமாக என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!


dd-talk-about-divorce

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணிப்புரிந்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தனது சிறுவயது முதல் ஏராளமான மேடை நிகழ்ச்சியை செய்து வருகிறார். மேலும் இவர் சின்னத்திரை தொடர்களில் மட்டுமின்றி ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதிலும் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி,ஜோடி நிகழ்ச்சிகள் மக்களிடையே பெருமளவில் பிரபலமானது. அதனை தொடர்ந்து அவர் சின்னத்திரை பிரபலங்களை வைத்து எங்கிட்ட மோதாதே என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்கி வந்தார். மேலும் தற்போது speed  என்ற ஷோவையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

divyadharsini

தொகுப்பாளினி டிடிக்கு அவரது நண்பர் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரன் என்பவருடன் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால் நாளடைவில் இருவருக்கும் கருது வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் விவாகரத்து செய்து தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து டிடி பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தனது விவாகரத்து குறித்து இதுவரை வாய் திறக்காத டிடி சமீபத்தில் விருது விழா ஒன்றில் மேடையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ளார். அப்பொழுது அவர் நமது வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன், நமது கல்யாண உறவு கூட முறியலாம், வேறு எந்த உறவுகள் வேண்டுமானாலும் தள்ளி போகலாம்.ஆனால் நாம் அவற்றையெல்லாம் மறந்து விட்டு, வழக்கம்போல காலையில் எழுந்து மேக்கப் போட்டுக்கொண்டு வேலைக்கு கிளம்பினால் உங்களது அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது. வெற்றி உங்களை தானே தேடி வரும் என்று உருக்கமாக பேசியுள்ளார்.