ப்பா.. பாலிவுட் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே.. வெளிநாட்டில் செம ஸ்டைலாக மாஸ் காட்டும் டிடி! தெறிக்கவிடும் புகைப்படங்கள்!!

ப்பா.. பாலிவுட் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே.. வெளிநாட்டில் செம ஸ்டைலாக மாஸ் காட்டும் டிடி! தெறிக்கவிடும் புகைப்படங்கள்!!



DD latest photoshoot viral

விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர்1, சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஆஸ்தான தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ஆடியோ வெளியீட்டு விழா, கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

 சின்னத்திரையில் சில தொடர்களில் நடித்திருக்கும் அவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் சிறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது கலகலப்பான பேச்சிற்கும் சிரிப்பிற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார்.

டிடி தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு செம கிளாமராக, ஸ்டைலிஷாக அவர் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அவ்வாறு தற்போதும் மாடர்னான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் பாலிவுட் ஹீரோயின்களையே ஓரங்கட்டிவிடுவீர்கள் போல என கமெண்டு செய்து வருகின்றனர்.