சேலையில் வசீகரிக்கும் அழகில், விதவிதமாக மயக்கும் டிடி! சொக்கிப்போன நெட்டிசன்கள்!!

சேலையில் வசீகரிக்கும் அழகில், விதவிதமாக மயக்கும் டிடி! சொக்கிப்போன நெட்டிசன்கள்!!


dd-latest-photoshoot-viral

விஜய் தொலைக்காட்சியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டான ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும், இவர் விருது வழங்கும் விழாக்கள், இசை வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். தொகுப்பாளினியாக மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ள டிடி வெள்ளித்திரையிலும் 
பவர் பாண்டி, சர்வதாள மயம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் போட்டோஷுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வபோது வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது சேலையில் வசீகரிக்கும் அழகில் வித்தியாசமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.