சினிமா

என் கனவு நிறைவேறிருச்சு! டிடிக்கு அடித்த பேரதிர்ஷ்டம்! உச்சகட்டமகிழ்ச்சியுடன் அவரே வெளியிட்ட புகைப்படம்!

Summary:

dd gave voice in hollywood movie

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணிப்புரிந்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். மேலும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்த அவர் அதனை தொடர்ந்து பல வெள்ளிதிரையிலும் நடித்துள்ளார்.

மேலும் விஜய் டிவியில் காபி வித் டிடி,ஜோடி, மற்றும் விருது விழாக்கள் போன்ற பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் இவர் தனது நண்பரை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் சில நாட்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

divyadharsini க்கான பட முடிவு

அதனை தொடர்ந்து டிடி, விஜய் தொலைக்காட்சியில் எங்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அதுமட்டுமின்றி டிடி   பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமின்றி அவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார்.

இவ்வாறு நாளுக்கு நாள் புகழின் உச்சிக்கு செல்லும் டிடி disneyfilmsindia தயாரிக்கும் Frozen2  என்ற ஹாலிவுட் படத்தில் நடிகை Annaவிற்கு தமிழில் குரல் கொடுத்துள்ளார். இதனை மிகவும் மகிழ்ச்சியாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எனது கனவு நினைவாகி விட்டது.எனது தொழிலில் இது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் 22 வெளியாகும் இப்படத்தை குழந்தைகளுடன் பார்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement