கடைசியாக ஒரு மெசேஜ் அனுப்பினேன்! முதன் முறையாக தனது விவாகரத்து குறித்து மனந்திறந்த தொகுப்பாளினி டிடி!

கடைசியாக ஒரு மெசேஜ் அனுப்பினேன்! முதன் முறையாக தனது விவாகரத்து குறித்து மனந்திறந்த தொகுப்பாளினி டிடி!


DD

இன்று வெள்ளிதிரை நடிகைகளுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதை விட அதிகமான அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தொகுப்பாளினி டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணிப்புரிந்து வருகிறார்.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதிலும் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி,ஜோடி நிகழ்ச்சிகள் மக்களிடையே பிரபலமானது. சமீபத்தில் தனது நண்பரை திருமணம் செய்தார்.

dd

ஆனால் சில நாட்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதனை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது விவாகரத்து குறித்து மனந்திறந்த பேசியுள்ளார்.

அவர் பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ரிலேஷன்ஷிப் என்பது இரண்டு நபர் சம்மந்தப்பட்ட விஷயம், சில நேரங்களில் அது உடையலாம். இதனால் நிச்சயம் காயம் ஏற்படும். ஆனால் அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.

மேலும் அவர் கடைசியாக ஒரு மெசேஜ் அனுப்புனேன் அவ்வளவு தான். என்னுடைய இந்த வாழ்க்கைக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.